சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி நாடார் சரசுவதி கலை கல்லூரியில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.
தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்கள் மற்றும் தேனி எம்.சி.கே.எஸ்.பிரானிக் ஹீலிஸ் அர்ஹடிக் யோகா மையம் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கி பேசினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசிபிரபு வரவேற்று பேசினார். யோகா மைய பயிற்சியாளர் ஞானசவுந்தரி, சிறப்பு பயிற்சியாளர் வினோதா ராஜம் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் உறவின்முறை கல்வி நிறுவனங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கல்லூரி பெண்கள் விடுதி செயலாளர் கண்ணாயிரம், கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். முடிவில் யோகா மைய ஒருங்கிணைப்பாளர் பர்ஷீலா ராமச்சந்திரன் நன்றி கூறினார்.