செங்கோட்டை நீதிமன்றத்தில் சர்வதேச யோகா தின விழா
செங்கோட்டை நீதிமன்றத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி எம்.சுனில்ராஜா தலைமை தாங்கினார். வழக்கறிஞா்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனா். வழக்கறிஞா் சங்க இணைச்செயலாளா் கார்த்திகைராஜன் வரவேற்றார். யோகா பயிற்சியாளா் பாலசுப்பிரமணியன் யோகா பயிற்சி வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞா் பழனிக்குமார், சாமி, கோபிநாத், நித்யானந்தம் நல்லையா, நீதிமன்ற பணியாளா்கள் பிரபாகரன், முகம்மதுபைசல், சிவசங்கர், முருகையா உள்பட பலா் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.