அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி


அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி
x

தமிழகத்தில் 6 மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தமிழகத்தில் 6 மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சைபர் செக்யூரிட்டி கொள்ளையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் திருத்தம் செய்வதற்கான பணி நடந்து வருகிறது. வெகு விரைவில் முதல்-அமைச்சரின் ஒப்புதலோடு இந்த திருத்த சட்டம் தகவல் தொழில்நுட்பவியல் துறை மூலம் வெளியிடப்படும்.

இன்டர்நெட் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா சிதறால் பகுதிக்கு மாற்றப்பட்டதாக கூறுவது உண்மை இல்லை. நாகர்கோவில் கோணத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான திட்டம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். பின்னர் அது விரிவாக்கம் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வசதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story