பேட்டி


பேட்டி
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் தலைவர் பேட்டி அளித்தார்.

திருவாரூர்

முத்துப்பேட்டையில் நேற்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி தமிழ்நாட்டின் மீது மிகுந்த மரியாதையை வைத்துள்ளார். தனது தந்தையை இந்த மண்ணில் தான் அவர் இழந்தார். ஆனாலும் தமிழகத்தின் மீதும், இங்குள்ள மக்களின் மீதும் அவர் மிகுந்த நன்மதிப்பை கொண்டுள்ளார். அதன் காரணமாகவே ஜோடோ யாத்திரையை தமிழகத்தில் இருந்து ராகுல்காந்தி தொடங்கினார். இந்தியநாடு பாதுகாப்பாக இருக்கவும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்தவும், அனைவரும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கும் இந்தியா கூட்டணியை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்டத்தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story