ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளை எதிர்க்கிறோம்-சீமான் பேட்டி


ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளை எதிர்க்கிறோம்-சீமான் பேட்டி
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காளைகளை அலங்கரித்து வாடிவாசலில் விடுவது நமது மரபு. ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சிவகங்கை

தேவகோட்டை

காளைகளை அலங்கரித்து வாடிவாசலில் விடுவது நமது மரபு. ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

கல்லூரி விழா

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் துறைகளுக்கிடையே நுண்கலைத்திறன் போட்டியின் ஆனந்த சாரல்-2023 விழா நடைபெற்றது. மதுரை உயர் மறை மாவட்ட தமிழ் தேசிய கிறிஸ்தவர் இயக்கச் செயலாளர் சகாயராசு விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலாளர் கிருஷ்டி கே.சேசுராஜ் ஆசியுரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

நுண்கலைத்துறை உதவி பேராசிரியர் ஜான் மெர்லின் வரவேற்றார்.இந்த கல்லூரியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள்

தி.மு.க. மத்திய அரசு அதிகாரத்தில் இருக்கும்போது சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது மத்திய அரசிடம் அதிகாரம் உள்ளது. அந்த திட்டத்தை செயல்படுத்த விடுவார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒப்பந்த நர்சுகள் போராட்டம் நியாயமானது.நாம் தமிழர் கட்சி முழு ஆதரவளிக்கும். நர்சுகளின் கோரிக்கையை அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும்.ஜல்லிக்கட்டு போட்டியில் கொரோனா சான்றிதழ் வரவேற்கத்தக்கது. ஜல்லிக்கட்டுகளுக்கு கட்டுப்பாடுகள் தேவையில்லை. ஜல்லிக்கட்டு காளைக்கு சந்தனம், குங்குமம், மாலை சலங்கை கட்டி வாடி வாசலில் காளைகளை அவிழ்த்து விடுவதுதான் மரபு. ஜல்லிக்கட்டுக்கான கட்டுப்பாடுகளை நாம் தமிழர் கட்சி முற்றிலும் எதிர்க்கிறது. நீட் தேர்வு அவசியமற்றது. நீட் தேர்வு வினா தாள்கள் வட மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

நடிகர்கள் தங்களின் படங்களை வெளியிடும் போது ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.இளைஞர்கள் திரை கவர்ச்சியில் இருக்கின்றனர். நடிகர்கள் அவர்களை கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story