கடனுதவி வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு


கடனுதவி வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு
x

கலெக்டர் அலுவலகத்தில் கடனுதவி வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது.

வேலூர்

தாட்கோ மூலம் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடனுதவி பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பலர் இணையதளத்தில் விண்ணப்பித்தனர்.

அவர்களுக்கான நேர்முகத் தேர்வு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தாட்கோ மேலாளர் பிரேமா தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய ஆய்வாளர் அறிவுக்கரசு, வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சரஸ்வதி, கால்நடை மருத்துவர் அந்துவன், இளநிலை உதவியாளர் சுவேதா ஆகியோர் பங்கேற்று, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட 315 பேரிடம் திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களை சரிபார்த்தனர்.

தகுதியுடைய பயனாளிகளுக்கு கடனுதவி வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story