மாற்றுத்திறனாளி பாதுகாவலர்களுக்கு பராமரிப்பு நிதிக்கான நேர்காணல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பாதுகாவலர்களுக்கு பராமரிப்பு நிதிக்கான நேர்காணல் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் 2,268 நபர்களுக்கு ரூ.2,000 மாதாந்திர பராமரிப்பு நிதி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் உயர் ஆதரவு தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலருக்கு கூடுதலாக ரூ.1,000 உயர்த்தி வழங்கப்பட உள்ளதால், அவர்களுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு நேர்காணல் முகாம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் 102 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் தகுதியான 87 மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலருக்கு ரூ.1,000 கூடுதலாக வழங்கிட தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மாற்றுத்தினாளிகள் நல அலுவலர் சரவணகுமார், எலும்பு முறிவு மருத்துவர் வெங்கடேஸ்வரன், மனநல மருத்துவர் கோகுலன், குழந்தைகள் நல மருத்துவர் சதீஷ், கண் மருத்துவர் அரிபிரசாத், காது மூக்கு தொண்டை மருத்துவர் மீனா, பொது மருத்துவர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்தனர்.