கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு
கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு தொடங்குகிறது.
கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை (18.12.2022 தவிர்த்து) கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவுப் புத்தகம், தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிச் சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை மாற்றுத்திறனாளி உரிமை கோரலுக்கு ஆதாரமாக நேர்முகத் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.