சுயதொழில் புரிய கடனுதவி வழங்குவதற்கான நேர்காணல்
ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் சுயதொழில் புரிய கடனுதவி வழங்குவதற்கான நேர்காணல் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் சார்பில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் சுய தொழில் புரிந்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குவதற்கான நேர்காணல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் சுயதொழில் புரிய மானியத்துடன் கூடிய கடனுதவி பெற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 190 பேர், சுய தொழில் புரிவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு கடனுதவி வழங்கிடும் விதமாக நடைபெற்ற நேர்காணலில் விண்ணப்பதாரர்களிடம் மேற்கொள்ள உள்ள சுயதொழில் விவரம், பணி முன்அனுபவம் குறித்து கேட்டறியப்பட்டது என்றார்.
இதில் தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கணேசன், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பத்மலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.