சுயதொழில் புரிய மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க நேர்காணல்


சுயதொழில் புரிய மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க நேர்காணல்
x
தினத்தந்தி 15 April 2023 5:15 AM IST (Updated: 15 April 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் சுயதொழில் புரிய மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க நேர்காணல் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் சார்பில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் சுயதொழில் புரிய மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குவதற்கான நேர்காணல் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் சுயதொழில் புரிய ஏதுவாக மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும்பொருட்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழக இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு முதுநிலை வரிசை அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 140 பேர், சுயதொழில் புரிவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நேர்காணலில் விண்ணப்பதாரரின் முழு விவரம், தொழில் அனுபவம், சான்றிதழ் போன்றவை சரிபார்க்கப்பட்டது என்றார்.

இந்நிகழ்வின்போது தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story