கிராம உதவியாளர் பணிக்கு நேர்காணல்


கிராம உதவியாளர் பணிக்கு நேர்காணல்
x

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடைபெற்றது.

வேலூர்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் 4 கிராம உதவியாளர் பணிக்கு நேர்காணல் நேற்று தொடங்கியது. இந்த பணிக்கு இதுவரை 650 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று 90 பேர் நேர்காணலுக்கு வர வேண்டும். ஆனால் 20 பேர் வரவில்லை.

தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கி விண்ணப்பித்து வந்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார். இடர்பாடு நிவாரணத் தாசில்தார் சாதிக், துணை தாசில்தார் வேண்டா, வருவாய் ஆய்வாளர் தீனதயாளன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.


Next Story