கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு


கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு
x

வேலூரில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் தேர்வர்கள் சைக்கிள் ஓட்டி காண்பித்தனர்.

வேலூர்

கிராம உதவியாளர்

தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. மாவட்டம் வாரியாக காலிபணியிட விவரங்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 40 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்வு எழுத 5,762 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 4,111 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

வேலூர் தாலுகாவை பொறுத்தவரையில் 1,209 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 888 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்கு அடுத்த கட்டமாக வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்றும் நேர்முகத்தேர்வு நடைபெற்றது.

சைக்கிள் ஓட்டினர்

ஒருநாளைக்கு சுமார் 100 பேர் வீதம் அழைக்கப்பட்டு அவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறன், பொதுஅறிவு திறன், சைக்கிள் ஓட்டும் திறன் போன்றவை குறித்து பரிசோதிக்கப்பட்டது.

தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், துணை தாசில்தார்கள் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆகியோர் இந்த நேர்முகத்தேர்வினை நடத்தினர். அதில் கலந்து கொண்டவர்கள் சைக்கிள் ஓட்டி காண்பித்தனர். இந்த தேர்வு வருகிற 10-ந் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், அதன் பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story