திருச்செந்தூரில் பா.ஜனதா துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி


திருச்செந்தூரில் பா.ஜனதா துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
x

வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா தேர்தலை சந்திக்கும் என்று மாநில பா.ஜனதா துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தமிழக பா.ஜனதா மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பா.ஜனதா போட்டியிடும்.

தலைவர்களின் மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம் தான். தி.மு.க.வின் ஆட்சி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அக்னிபத் திட்டம் ஒரு அருமையான திட்டமாகும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வீட்டில் ஒருவருக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அது போன்று இல்லை. இது இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும், என்றார்.

அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில இளைஞரணி செயலாளர் பூபதி பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், திருச்செந்தூர் நகர தலைவர் நவ மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story