மனநல பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு இலவச சேவை எண் அறிமுகம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மனநல பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு இலவச சேவை எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மனநல சேவை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொலைதூர மனநல சேவை மையம் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக 14416 புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனநல ஆற்றுதல் படுத்தும் சேவை, வீடியோ பதிவு ஆலோசனை தொடர்ச்சியான வழிகாட்டு முறைகள் மனநல சேவை வழியாக அளிக்கப்படும்.
ஏற்கனவே 104 சேவை தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது. அதுபோல மன உளைச்சல் கொண்டவர்களுக்கு அதற்கான தீர்வு இதன் மூலம் வழங்கப்படும். இந்த மையத்தில் மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள், 20 ஆற்றுதல்படுத்துபவர்கள் செயல்படுவார்கள்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகை தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை. மருத்துவமனை உரிய ஆவணங்களை மறைத்துள்ளது. அதற்காக அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.