கிருஷ்ணகிரி நகராட்சியில்வீட்டில் இருந்து வரி செலுத்தும் மொபைல் ஆப் அறிமுகம்


கிருஷ்ணகிரி நகராட்சியில்வீட்டில் இருந்து வரி செலுத்தும் மொபைல் ஆப் அறிமுகம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகராட்சியில், 33 வார்டுகளிலும் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் தங்கள் வரிகளை நகராட்சிக்கு இணையம் மற்றும் மொபைல் ஆப் வழியாக வரி கட்டும் திட்டத்தை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி நகராட்சியில், சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை வரி மற்றும் கட்டணம், தொழில் வரி, குப்பை விரி உள்ளிட்டவைகளை நகராட்சி நிர்வாக ஆணையகரகத்தின் tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நேரடியாக கட்டலாம். பிறப்பு, இறப்பு சான்றிதழ், டிரேடு லைசென்ஸ், கட்டிட திட்ட வரைவு அனுமதி உள்ளிட்ட சேவைகளையும் இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே பெறலாம். இணையதளத்தின் மூலம் கிருஷ்ணகிரி நகராட்சிக்குள் வசிக்கும் நபர்கள் தங்களை பதிவு செய்தால், அதில் வரும் கியூ ஆர் கோட்' மூலம் வரி பாக்கிகளை செலுத்தியும், சலுகைகளையும் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை இதில் தெரிவிக்கலாம்.

மேலும் 'tnurbanesevai' என்ற 'மொபைல் ஆப்' மூலம் வரி கட்டும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்தால், உங்கள் வரி பாக்கிகளை வங்கி டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யு.பி.ஐ. முறையில் ஆன்லைனில் கட்டலாம். மேலும் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணையாதவர்கள், பணம் கட்டாதவர்களையும் இணைக்கும் வகையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நகராட்சி ஆணையாளர் வசந்தி, உதவி திட்ட அலுவலர் காயத்ரி, செயற்பொறியாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் தாமோதரன், இளநிலை பொறியாளர் அறிவழகன், இளநிலை உதவியாளர்கள் சரவணன், பாலச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story