முதியோர்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்


முதியோர்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்
x

முதியோர்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தமிழக அரசு இணைந்து முதியோர்களுக்கு தேசிய அளவிலான முதியோர்களுக்கு 14567 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியது. இதனை திருப்பத்தூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கி இலவச எண்ணை அறிமுகப்படுத்தி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, எஸ்.ஆர்.டி.பி.எஸ். இயக்குநர் தமிழரசி, மாநில ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story