குறைகளை தெரிவிக்க 'வாட்ஸ் அப்' எண் அறிமுகம்
குறைகளை தெரிவிக்க ‘வாட்ஸ் அப்’ எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொது மக்களுக்கான சுகாதாரம், குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நகராட்சி நிர்வாகம் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் குறைகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அடிப்படை வசதிகளில் குறைபாடு இருந்தால் 73973 92675 (நகராட்சி ஆணையாளர்), 73973 92676 (நகராட்சி பொறியாளர்), 8248887937 (துப்பரவு ஆய்வாளர்) ஆகிய வாட்ஸ் அப் எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
இந்த தகவலை நகராட்சி ஆணையாளர் பழனி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story