செஸ் ஒலிம்பியாட் சின்னம் அறிமுக விழா


செஸ் ஒலிம்பியாட் சின்னம் அறிமுக விழா
x

தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் அறிமுக விழா நடந்தது.

தர்மபுரி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து பள்ளி மாணவ-மாணவிகளிடையே விளம்பரப்படுத்தும் நோக்கிலும், செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் அனைத்து பள்ளிகளிலும் செஸ் ஒலிம்பியாட் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் அறிமுக விழா மற்றும் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கி செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை திறந்து வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் செஸ் போட்டியின் சிறப்பம்சங்கள் குறித்து ஆசிரியர்கள் விளக்கி கூறினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஜோதிலதா நன்றி கூறினார்.


Next Story