தைவான் நாட்டை சேர்ந்த நிறுவன அலுவலர்களுடன் அறிமுக கூட்டம்


தைவான் நாட்டை சேர்ந்த நிறுவன அலுவலர்களுடன் அறிமுக கூட்டம்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் ரூ.2,302 கோடியில் காலணி தொழிற்சாலை அமைப்பது குறித்து தைவான் நாட்டை சேர்ந்த நிறுவன அலுவலர்களுடன் அறிமுக கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக அளவில் காலணிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் தைவான் நாட்டைச் சேர்ந்த பவ்சென் கார்ப்பரேஷன் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்களுடனான அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவான் நாட்டின் பவ்சென் குழுமத்தை சேர்ந்த ஹைக்ளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.2 ஆயிரத்து 302 கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில் புதிய உற்பத்தி திட்டம் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக அளவில வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

District Revenue Officer Sathyanarayanan, District Forest Officer Sumesh Soman, Collector's Interview Assistant Suresh, District Additional Superintendent of Police Jawaharlal, Industrial Guidance Institute Vice President Prashanth, Revenue Kotaksari Pavitra, Yogajyoti, Cuddalore Chipcot Project Officer Tamilselvi, District Industrial Center General Manager Chandrasekaran, officers of Bowsen Group were present in the meeting. and high government officials attended.


Next Story