கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் 300-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் 300-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கிருஷ்ணகிரி நகராட்சி அருகில் உள்ள கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்தன. உயிர் இழப்புகளும் ஏற்பட்டன. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாக அகற்ற ஊராட்சி மன்றம் சார்பில் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆக்கிமிப்புகளை அகற்றவில்லை. இதை தொடர்ந்து நேற்று காலை சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

கடும் நடவடிக்கை

இதையொட்டி ராயக்கோட்டை மேம்பாலம் முதல் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வரையில் சாலையின் இருபுறமும் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. இதில் போர்டுகள், பிளக்ஸ் பேனர்கள், ஷெட்டுகள் ஆகியவை அகற்றப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் கூறுகையில், 300-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் யாரேனும் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத், செல்வராஜ், மதியழகன் மற்றும் போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story