விழுப்புரம் சேமிப்பு கிடங்கில்2 ஆயிரம் விவிபேட் எந்திரங்கள் இருப்பு வைப்புஅனைத்துக்கட்சி பிரதிநிதிகள் சரிபார்ப்பு


விழுப்புரம் சேமிப்பு கிடங்கில்2 ஆயிரம் விவிபேட் எந்திரங்கள் இருப்பு வைப்புஅனைத்துக்கட்சி பிரதிநிதிகள் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் சேமிப்பு கிடங்கில் 2 ஆயிரம் விவிபேட் எந்திரங்கள், அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது.

விழுப்புரம்


விவிபேட் எந்திரங்கள் இருப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தினால் விழுப்புரம் மாவட்டத்திற்கு வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களான விவிபேட் எந்திரங்கள் 2 ஆயிரம் எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த எந்திரங்கள், பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டு அவை வாகனங்களின் மூலம் நேற்று விழுப்புரம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அந்த எந்திரங்களை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்க ஏதுவாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டு அந்த எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன.

உறுதித்தன்மை

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கின் உறுதித்தன்மை குறித்து அறிந்திட தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மின்னணு எந்திர சேமிப்பு கிடங்கின் உறுதித்தன்மை குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, தணிக்கை மேற்கொண்டார்.

இந்நிகழ்வின்போது விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் உஷா, விழுப்புரம் தாசில்தார் ராஜ்குமார், விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, அ.தி.மு.க. நகர செயலாளர் ராமதாஸ், நகரமன்ற கவுன்சிலர் வக்கீல் ராதிகா செந்தில், பா.ஜ.க. நகர செயலாளர் வடிவேல்பழனி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story