பாதையை ஆக்கிரமித்ததாக பொதுமக்கள் புகார்-தாசில்தார் விசாரணை
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள பட்டகனப்பள்ளி கிராமத்தின் வழியாக வெங்கடேஷ்புரம் கிராமத்திற்கு விவசாய நிலம் வழியாக பட்டகனப்பள்ளி, அலேநத்தம், புடுகனூர் ஆகிய 3 கிராம மக்கள் பல ஆண்டுகளாக சென்று வந்தனர்.
இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை முள்வேலி அமைத்து ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓசூர் தாசில்தாருக்கு கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் தாசில்தார் சுப்பிரமணி, பாகலூர் வருவாய் ஆய்வாளர் ரூகேஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் பொதுப்பாதை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Next Story