கடலூரில் புலனாய்வு பிரிவு
விழுப்புரம் காவல் சரகம், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புலனாய்வு பிரிவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் காவல் சரகம், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புலனாய்வு பிரிவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமை தாங்கி, புலனாய்வு பிரிவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், புலனாய்வு குழுவில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 10 போலீஸ்காரர்கள் பணியாற்றுவார்கள். இக்குழுவினர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் பதியப்படும் கொலை, ஆதாய கொலை, கூட்டு கொள்ளை, வழிப்பறி, சந்தேக மரணம், ஆள்கடத்தல், ஆயுதம், வெடிபொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள், சாதி மற்றும் மத மோதல்கள், இரண்டுக்கும் மேற்பட்ட விபத்து மரணம், பிரச்சினைக்குரிய சண்டை வழக்குகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டால் பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளை புலனாய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் புலன் விசாரணை முடித்து உடனடியாக குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.