40 நாள் குழந்தையை வாளியில் அமுக்கி கொன்ற சம்பவத்தில் 2 பேரிடம் விசாரணை


40 நாள் குழந்தையை வாளியில் அமுக்கி கொன்ற சம்பவத்தில் 2 பேரிடம் விசாரணை
x

அரக்ேகாணத்தில் வாளியில் அமுக்கி குழந்தையை கொன்ற சம்பவத்தில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்ேகாணத்தில் வாளியில் அமுக்கி குழந்தையை கொன்ற சம்பவத்தில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்

அரக்கோணம் காவனூர் ரோடு தோல் ஷாப் பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது 22). இவரது மனைவி அம்சா நந்தினி (18). வெவ்வேறு பிரிவை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அம்சா நந்தினிக்கு 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவ தினத்தன்று இரவு அம்சா நந்தினி குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு குழந்தை யுவன் மற்றும் மாமியார் கீதாவுடன் தரையிலும் அருகில் இருந்த கட்டிலில் மனோவும் தூங்கியுள்ளனர்.

நள்ளிரவு 2 மணியளவில் எழுந்து பார்த்த போது குழந்தை இல்லாததை கண்ட அம்சா நந்தினி அதிர்ச்சியடைந்து கணவர் மனோ மற்றும் மாமியாரை கீதா ஆகியோரை எழுப்பி விசாரித்துள்ளார். தொடர்ந்து பல இடங்களில் தேடிய போது வீட்டின் வெளியே உள்ள கழிவறையில் உள்ள பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணிரில் மூழ்கி தலை கீழாக இறந்த நிலையில் குழந்தை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து மனோ அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணை

இந்த நிலையில் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மனோவின் உறவினர்கள் இருவருக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்பட்டது.

இதையடுத்து இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வாளி தண்ணீரில் அமுக்கி குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையின் நிலை குறித்து கேட்டறிந்து துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

அப்போது அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் உடனிருந்தார்.


Next Story