காரில் துப்பாக்கி கொண்டு வந்த 4 பேரிடம் விசாரணை


காரில் துப்பாக்கி கொண்டு வந்த 4 பேரிடம் விசாரணை
x

பந்தலூர் அருகே காரில் துப்பாக்கி கொண்டு வந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களை எச்சரித்து கேரளாவுக்கு திருப்பி அனுப்பினர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே கேரள எல்லையில் எருமாடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோழிக்கோட்டில் இருந்து சுல்தான்பத்தேரி, தாளுர் வழியாக வைத்திரிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் 4 பேர் வந்ததும், அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். விசாரணையில் வைத்திரியில் உள்ள நண்பரிடம் துப்பாக்கியை வாங்கி கோழிக்கோட்டிற்கு சென்றதும், பின்னர் அவரிடம் திரும்ப ஒப்படைக்க கொண்டு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.


Next Story