குற்ற சம்பவங்களில் புலன் விசாரணை:3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 போலீசாருக்கு பாராட்டு
குற்ற சம்பவங்களில் தீவிரமாக புலன் விசாரணை: செய்த 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 போலீசாருக்கு பாராட்டு தொிக்கப்பட்டது.
குற்ற சம்பவங்களில் சிறப்பாக புலன் விசாரணை நடத்திய 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
பாராட்டு
ஈரோடு மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த போலீசாருக்கு பாராட்டு விழா நடந்தது. இதில், ஈரோட்டில் அரசு பள்ளிக்கூட ஆசிரியை கொலை வழக்கில் கொலையாளியை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், மக்களுக்கு இடையூறு செய்து வந்த ரவுடியை கைது செய்த கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா பிரபு, சத்தியமங்கலத்தில் நடந்த குற்ற வழக்கில் புலன் விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
சைபர் கிரைம்
இதேபோல் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி, மலையம்பாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஏட்டுகள் சாந்தி, ரேவதி உள்பட 31 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.