வேட்பு மனுவில் தவறான தகவல்:எடப்பாடி பழனிசாமி மீதான விசாரணை அறிக்கை சேலம் கோர்ட்டில் தாக்கல்


வேட்பு மனுவில் தவறான தகவல்:எடப்பாடி பழனிசாமி மீதான விசாரணை அறிக்கை சேலம் கோர்ட்டில் தாக்கல்
x
சேலம்

தேர்தல் வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி தவறான தகவல் அளித்த புகார் மனு தொடர்பாக சேலம் கோர்ட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனர்.

பிரமாண பத்திரம்

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சஞ்சய் காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மிலானி. இவர் கடந்த மாதம் சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு ஆன்லைன் மூலம் ஒரு புகார் மனு அனுப்பினார். அதில், 'முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் சொத்து விவரம் பற்றிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல்கள் அளித்து உள்ளார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அதில் உண்மை தன்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். மேலும் விசாரணை அறிக்கையை மே மாதம் 26-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு கலைவாணி குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

விசாரணை அறிக்கை தாக்கல்

இந்த மனு குறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி விசாரணை நடத்தினார். இந்த நிலையில் விசாரணை அறிக்கையை அவர் நேற்று சேலம் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சொத்து விவரம் எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்று போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.


Next Story