புதிய காப்பீடு திட்டத்தில் இணைய பொதுமக்களுக்கு அழைப்பு


புதிய காப்பீடு திட்டத்தில் இணைய பொதுமக்களுக்கு அழைப்பு
x

தபால் துறையின் புதிய காப்பீடு திட்டத்தில் இணைய பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை மாவட்ட தலைமை தபால் நிலைய கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தபால் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் ஆண்டிற்கு ரூ.399 செலுத்தி ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள் இணையலாம். இதில், 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள மற்றும் முகவரி சான்று நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடும் இல்லாமல் தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை மூலம் 5 நிமிடத்தில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த விபத்து காப்பீடு பாலிசி வழங்கப்படுகிறது. விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர ஊனம், பகுதி ஊனம், பக்கவாதம் ஆகியவற்றுக்கு விபத்து காப்பீடு செய்யப்படுகிறது. விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு உள்நோயாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.60 ஆயிரமும், புற நோயாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்படும். விபத்தினால் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவர்களின் 2 குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். விபத்தினால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகையாக ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கு வழங்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க செல்லும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் ஈமக்கிரியை செய்ய ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story