திருச்சியில் ஐ.பி.எல். கிரிக்கெட் பெரிய திரையில் ஒளிபரப்பு


திருச்சியில் ஐ.பி.எல். கிரிக்கெட் பெரிய திரையில் ஒளிபரப்பு
x

திருச்சியில் ஐ.பி.எல். கிரிக்கெட் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

திருச்சி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 15 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. ஐ.பி.எல். 16-வது சீசன் கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. வருகிற மே 21-ந் தேதி முடிகிறது. இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிகளை ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களிக்கும் வகையில் 45 முக்கிய நகரங்களில் ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சியாக ஐ.பி.எல். போட்டிகள் பெரிய திரையில் ஒளிபரப்பப்படுகிறது. தமிழகத்தில் மதுரையிலும், நெல்லையிலும் ஏற்கனவே போட்டிகள் ஒளிபரப்பப்பட்டன. தற்போது திருச்சியில் தேசிய கல்லூரி வளாகத்தில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் பகல் 1.30 மணி முதல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் பெரிய திரையில் ஒளிபரப்பப்படுகிறது. போட்டிகளை 10 ஆயிரம் பேர் வரை அமர்ந்து பார்க்க முடியும். இதற்கான அனுமதி இலவசம். இதில் வெறித்தனமான ரசிகர் என நிரூபிப்பவர் ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை வெல்வார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான அனுபவத்தை கொடுக்கும். இதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செய்து வருகிறது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய இயக்க மேலாளர் ஸ்மீத்மலாபுர்கர் தெரிவித்தார். அப்போது திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் உடனிருந்தார்.


Next Story