இரும்பு வேலிகள் அமைக்க வேண்டும்
இரும்பு வேலிகள் அமைக்க வேண்டும்
திருமருகல் அருகே நெற்களத்தை சேதப்படுத்தும் கால்நடைகளை தடுக்க இரும்பு வேலிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்களம்
திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி பள்ளிக்கூடம் தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெற்களத்தை அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து அறுவடை செய்த நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கும், விற்பனைக்கு ஏற்ப நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க காய வைப்பதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அருகில் உள்ளவர்கள் கால்நடைகளை நெற்களத்தை சுற்றி கட்டி வைப்பதாலும், மேய்ச்சலுக்கு விடுவதாலும் நெற்களத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து சேதம் அடைகிறது. இதனால் விவசாயிகள் நெல் உலர்த்துவது நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுத்துகிறது.
இரும்பு வேலிகள்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெற்களத்தை சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து கால்நடைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.