இந்திராகாந்தி சிலையின் இரும்பு ஏணி மர்மநபர்களால் உடைப்புமறியலில் ஈடுபட்டவர்கள் கைது
இந்திராகாந்தி சிலையின் இரும்பு ஏணி மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
இந்திராகாந்தி சிலையின் இரும்பு ஏணி மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் திருவுருவச் சிலை உள்ளது. இந்த சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக இரும்பு படிக்கட்டுகள் உள்ளன.
இந்த நிலையில் மர்ம நபர்கள் அந்த இரும்பு ஏணி டிக்கட்டை திடீரென உடைத்து எரிந்துள்ளனர். இதனை அறிந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல் பாஷா உட்பட 10 பேர் திடீரென சிலைக்கு முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
Related Tags :
Next Story