கழுத்தில் கம்பி குத்தி மாநகராட்சி தற்காலிக ஊழியர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் கழுத்தில் கம்பி குத்தி மாநகராட்சி தற்காலிக ஊழியர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை கருப்புசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது45). இவர் கும்பகோணம் மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்கில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தாா். நேற்று முன்தினம் மதியம் வேலை செய்யும் இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் ராமகிருஷ்ணன் சென்றார். அப்போது சாக்கடை அமைக்கும் பணிக்கு அமைக்கப்பட்டிருந்த கம்பியில் அவரது மோட்ார் சைக்கிள் நிலைத் தடுமாறி விழுந்தது. இதில் ராமகிருஷ்ணனின் கழுத்தில் கம்பி குத்தி அவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிசிக்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story