காரில் இரும்பு கடத்திய 2 பேர் கைது
காரில் இரும்பு கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கரின் தனிப்படை போலீசார் நேற்று கடலூர் கம்மியம் பேட்டை சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் சந்தேகமான முறையில் வந்தது. அந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரின் பின் இருக்கையில் இரும்பு கம்பிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த காரை இரும்பு கம்பிகளுடன் போலீசார் பறிமுதல் செய்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சோபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை (வயது 62), நடுவீரப்பட்டு பாலகுரு மகன் பிரகாஷ் (28) ஆகிய 2 பேர் என்றும், அவர்கள் புதுச்சத்திரம் அருகே பெரியக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து 13 இரும்பு கம்பிகளை திருடி, காரில் கடத்தி கடலூருக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இரும்பு மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.