இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு: தாசில்தார் பணி இடைநீக்கம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு: தாசில்தார் பணி இடைநீக்கம்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நெடுஞ்சாலைப் பணிகள் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றி வருபவர் முத்து. இவர் கடந்த 2020-21-ம் ஆண்டு ஓட்டப்பிடாரம் தாசில்தாராக பணியாற்றி வந்தார்.
அப்போது, பல்வேறு விதிகளை மீறி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. மேலும் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தகுதியற்ற நபருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதாகவும் கலெக்டருக்கு புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்துக்கும் புகார்கள் வந்தன. அதன் பேரில் மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து கோவில்பட்டி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி உள்ளார். விசாரணையில், முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதால், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தாசில்தார் முத்துவை பணி இடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story