பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும்


பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
x

திருவோணம் ஒன்றியத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஊரணிபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவோணம் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், ஒன்றிய தலைவர் டி.ஜி.பாலசந்தர், ஒன்றிய துணைத் தலைவர் ராமசாமி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பாசன வாய்க்கால்களை தூர் வரவேண்டும்

கூட்டத்தில், திருவோணம் ஒன்றியம் வெட்டுவாக்கோட்டை பொதிய வாய்க்கால், வெள்ளத்தான் விடுதி 2-ம் நம்பர் வாய்க்கால், உஞ்சியவிடுதியில் இருந்து காரியாவிடுதி செல்லும் 13-ம் நம்பர் வாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நிபந்தனையின்றி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டும். கேரளாவில் நடைபெற உள்ள விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாட்டிற்கு கீழவெண்மணியில் இருந்து வரும் ஜோதிக்கு வருகிற டிசம்பர் மாதம் 5-ந்தேதி திருவோணத்தில் வரவேற்பு அளிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story