'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா?


ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை சாத்தியமா?
x

‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை’ சாத்தியமா?

நாகப்பட்டினம்

பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரே போலீஸ் சீருடை

மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, "ஒரே நாடு ஒரே தேர்தல்', ஒரே நாடு ஒரே மொழி', 'ஒரே நாடு ஒரே வரி', 'ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு' என்ற வரிசையில் இப்போது 'ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை' என்ற கோஷத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகளின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை" என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்" என்றார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பிரதமரின் இந்த யோசனைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டுவந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தியாவில் காவல் துறை என்ற அமைப்பு 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அணிய வேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கியுள்ளது.

அதே நேரத்தில், இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல வடிவமைத்துக்கொள்கின்றன.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில். போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. ஏட்டுகள், தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக் டர்கள் வரை அரைக்கால்சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1978-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண் டுவரப்பட்டது.

வேறுபாடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சட்டையும், காக்கி 'பேண்ட்டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச்சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதேபோல டெல்லி உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம். ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப நிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்தநிலையில், மத்திய அரசு இப்போது முன்வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் தங்களு டைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

வேறுபாடு இருக்காது

நாகைைய சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான்:-

மத்திய அரசு ஒரே, நாடு ஒரே சீருடை என்பதை வலியுறுத்தி வருகிறது. ஒரு துறையில் பொதுவான உடைக்கு பெயர் தான் சீருடை. சட்ட ஒழுங்கை காக்கும் போலீஸ் துறையில் சீருடை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுவது சரியானதாக இருக்காது என்று கருதுகிறேன். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சீருடையில் சின்னஞ்சிறு மாற்றங்கள் உள்ளது. வேறு மாநில போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தமிழகம் வந்தால், மக்கள் மத்தியில் கூர்கா போல தோன்றலாம். உதாரணமாக மேற்குவங்க போலீசாரின் சீருடை வெள்ளை நிறத்தில் இருக்கும். அங்குள்ள போலீசார் குற்றவாளிகளை பிடிக்க அவசர கதியில் தமிழகத்திற்கு வரும்போது, இங்குள்ள மக்கள் மத்தியில் ஒருவித குழப்பம் ஏற்படும். இதனால் சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதில் சற்று தொய்வு ஏற்படும். நாடு முழுவதும் ஒரே போலீஸ்துறை சீருடை ஆக இருந்தால், இது மாதிரியான வேறுபாடு இருக்காது. ஒரே மாதிரியான சீருடை கொண்டு வரும்போது போலீசின் பலம் அதிகரிக்கும்.


Next Story