ஈஷா யோகா மைய ரத யாத்திரை வந்தவாசி வருகை
ஈஷா யோகா மைய ரத யாத்திரை வந்தவாசி வந்தது.
திருவண்ணாமலை
வந்தவாசி
கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி மாதம் 18-ந் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்பட்ட ஈஷா யோகா மைய ரத யாத்திரை இன்று வந்தவாசிக்கு வந்தது. மேளதாளம் முழங்க சிவபக்தர்கள் ரதத்துக்கு வரவேற்பு அளித்தனர்.
ஆதியோகி சிலை கொண்ட ஒரு ரதமும், நாயன்மார்கள் சிலைகள் கொண்ட ஒரு ரதமும் ஒன்றன்பின் ஒன்றாக நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
சுமார் 50 பேர் கொண்ட தென்கைலாய பக்தி பேரவையினர் ரதத்துடன் பாதயாத்திரையாக சென்றனர்.
அப்போது மகா சிவராத்திரி குறித்த அழைப்பிதழ்கள் துண்டு பிரசுரங்களாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
பின்னர் ரதம் சேத்துப்பட்டுக்கு புறப்பட்டுச் சென்றது.
Related Tags :
Next Story