சென்னையில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல்


சென்னையில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல்
x

சென்னையில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல் -அதிகாரிகள் நடவடிக்கை.

சென்னை,

சென்னை துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைப்பு (பி.ஐ.எஸ்.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த கடையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அங்கு ஐ.எஸ்.ஐ. முத்திரையின்றி பொம்மைகள் விற்கப்படுவதை கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து மின்சாரத்தில் இயங்கக்கூடிய, பிளாஸ்டிக் பொருட்களால் ஆன, பேட்டரி மூலம் இயக்கப்படும் பொம்மைகள் என 817 பொம்மைகளை பறிமுதல் செய்தனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இறக்குமதி செய்யப்பட்ட, விற்பனைக்கு வைக்கப்பட்ட அனைத்து பொம்மைகளுக்கும் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெறுவது முக்கியம். எனவே நிறுவன உரிமையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் ஐ.எஸ்.ஐ. முத்திரையை தவறாக பயன்படுத்துவது தெரிந்தால் BIS Care என்ற செயலி மூலமாகவும், cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்போரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story