விண்வெளி பூங்கா அமையும் இடத்தில் இஸ்ரோ தலைவர் ஆய்வு


விண்வெளி பூங்கா அமையும் இடத்தில் இஸ்ரோ தலைவர் ஆய்வு
x

கன்னியாகுமரியில் விண்வெளி பூங்கா அமையும் இடத்தை இஸ்ேரா தலைவர் சோம்நாத் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் விண்வெளி பூங்கா அமையும் இடத்தை இஸ்ேரா தலைவர் சோம்நாத் ஆய்வு செய்தார்.

விண்வெளி பூங்கா

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 25 லட்சத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி வருகின்றது. அதில் ஒன்று விண்வெளி பூங்கா அமைக்கும் திட்டம். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்வெளி குறித்து அறியப்படாத பல தகவல்களை அறியும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கன்னியாகுமரியில் ஸ்பேஸ் சயன்ஸ் அன்டு டெக்னாலஜி பார்க் என்ற விண்வெளி ஆராய்ச்சி பூங்காவை அமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி கோவளம் கடற்கரை சன்செட் பாயிண்ட் அருகே அதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரோ தலைவர் ஆய்வு

இந்தநிலையில் நேற்று மாலையில் கன்னியாகுமரி வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளி பூங்கா அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கன்னியாகுமரியில் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக தமிழக அரசு 12 ஏக்கர் இடத்தை விண்வெளி ஆய்வு மையத்திடம் வழங்கியுள்ளது. விண்வெளி பூங்கா அமைப்பதற்கான பணி விரைவில் தொடங்கும்

. விண்வெளி பயணம் மேற்கொள்வதற்காக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விண்வெளி பயணம் மேற்கொள்வதற்கான சோதனை அடிப்படையில் மனிதர்கள் போன்ற பொம்மைகளை தயார் செய்து விண்வெளிக்கு அனுப்பப்படும். அதன்பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த ஆய்வின்போது இஸ்ரோ உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.


Next Story