அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்


அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
x

அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை தொழிற்கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு ஜெயங்கொண்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் 5 நாட்கள் உள்ளுறைப் பயிற்சி நடைபெற்றது. இதில் 20 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் பல்வேறு பயிர்களுக்கான உயிர் உரங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், திரவ உயிர் உரங்களின் முக்கியத்துவம், விதைப்பண்ணை அமைத்தல், விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சி பெற்றனர். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்ரமணியன், மூத்த வேளாண்மை அலுவலர்கள் கலைச்செல்வி, சேகர் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் மூத்த வேளான்மை அலுவலர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாண்டியன் மற்றும் வேளாண் ஆசிரியர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் பள்ளியின் வேளாண்மைத் தொழிற்கல்வி பயிற்றுனர் கிருத்திகா நன்றி கூறினார்.


Next Story