பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்
நெல்லையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நெல்லையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
தமிழகத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு கடந்த 8-ந்தேதி தேர்வு முடிவு வெளியானது. தொடர்ந்து மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும் என்பதால், அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் நேற்று தலைமை ஆசிரியர்களால் பள்ளி மாற்றுச்சான்றிதழுடன், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவர் சேர்க்கை மும்முரம்
மேலும் கணினி மையங்களிலும் இணையவழியில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து மாணவ-மாணவிகள் பெற்றுக்கொண்டனர். இதற்கிடையே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.