வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைதுபெருந்துறையில் பரபரப்பு


வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைதுபெருந்துறையில் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Feb 2023 1:00 AM IST (Updated: 15 Feb 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் பரபரப்பு

ஈரோடு

பெருந்துறையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

வாரிசு சான்றிதழ்

பெருந்துறையை சேர்ந்தவர் ரவி. இவர் தனது தாயாருக்கு வாரிசு சான்றிதழ் பெற வேண்டி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அன்பரசனை அனுகினார்.

அப்போது அன்பரசன் வாரிசு சான்றிதழ் வேண்டும் என்றால் ரூ.35 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறிவிட்டு ரவி சென்றதால் சில நாட்கள் கழித்து அன்பரசன் ரவியிடம் ரூ.25 ஆயிரம் தாருங்கள் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என்றுள்ளார். அதற்கும் ரவி சம்மதிக்காததால் முடிவில் ரூ.8 ஆயிரம் மட்டும் தாருங்கள் சான்றிதழ் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

ரசாயனம் தடவிய நோட்டு

ஆனாலும் லஞ்சம் தர மனம் இல்லாத ரவி இதுகுறித்து உடனடியாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை அவரிடம் தந்து இதை அன்பரசனிடம் கொடுக்க சொன்னார்கள்.

அதன்படி நேற்று பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்ற ரவி தான் கொண்டு வந்த பணத்தை அன்பரசனிடம் கொடுக்க சென்றார். ஆனால் அன்பரசன் லஞ்ச பணத்தை வாங்காமல் அதை அலுவலக உதவியாளர் அலெக்சாண்டரிடம் கொடுக்க சொன்னார். உடனே பணத்தை ரவி அலெக்சாண்டரிடம் கொடுத்தார்.

கைது

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்துடன் அலெக்சாண்டரை கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட அலெக்சாண்டர் இந்த பணத்தை வருவாய் ஆய்வாளர் அன்பரசன் சொல்லித்தான் வாங்கினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் அன்பரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தார்கள். மேலும் பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story