ஒவ்ெவாரு குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்


ஒவ்ெவாரு குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்
x

ஒவ்ெவாரு குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்

நாகப்பட்டினம்

வேளாண் தோட்டக்கலை அமைப்பு ஒவ்ெவாரு குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் பேசினார்.

தோட்டக்கலை அமைப்பு தொடக்க விழா

கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் உள்ள வேளாண்மை கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் தோட்டக்கலை அமைப்பு தொடக்க விழா நடந்தது. இந்த அமைப்பினை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.‌ விழாவிற்கு செல்வராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

பின்னர் கலெக்டர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண் தோட்டக்கலை அமைப்பின் முக்கிய நோக்கம் கல்லூரியில் மரம் நடுதல், மாடித்தோட்டம், மலர்தோட்டம் மற்றும் காய்கறித்தோட்டம் அமைத்து மாணவர்களால் இவைகள் பராமரிக்கப்பட வேண்டும்.

இயற்கை முறையில் சாகுபடி செய்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான காய்கறிகள் விடுதி மாணவர்களுக்கு அன்றாடம் உணவில் சேர்க்கப்பட்டு மாணவர்களின் ஆரோக்கியம் நிலை நிறுத்தப்படும்.

ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்

வேளாண் தோட்டக்கலை அமைப்பு மூலம், நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பண்ணை தொழிலாளர்கள் மற்றும் இதர‌குழுக்களை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

இத்திட்டத்தினால் மாணவர்களின் தொழில்நுட்பத் திறன் மேம்படுவதுடன், மாணவர்களை தொழில் முனைவோராக உருவாக்க துணைபுரிகிறது. இந்த அமைப்பில் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் உள்நாட்டு காய்கறிகளை சேகரிக்கும் பணியும் நடைபெற உள்ளது. இந்த அமைப்பு ஒவ்வொரு குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும், மாணவர்களின் மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கும.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மரக்கன்று நட்டு வைத்து, மாணவிகள் விடுதியில் அமைக்கப்பட உள்ள மூலிகை செடிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் அக்கண்டராவ், தோட்டக்கலை துணை இயக்குனர் கண்ணன். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story