ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
விருதுநகர் பேராலி ரோட்டை சேர்ந்தவர் அனந்த சிவராமன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்திற்கு வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கேரளாவிற்கு சென்று திரும்பியவர் சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் உடல் நலம் சரியில்லை என்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். சம்பவத்தன்று குடும்பத்தாருடன் இரவு உணவு அருந்திவிட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். மறுநாள் காலையில் அவர் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்குப்போட்டு அறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அவரது சகோதரர் ஆனந்த ராமன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story