போலீஸ் நிலையத்தில் காதலியை கரம்பிடித்த ஐ.டி. நிறுவன ஊழியர்


போலீஸ் நிலையத்தில் காதலியை கரம்பிடித்த ஐ.டி. நிறுவன ஊழியர்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் உவரி போலீஸ் நிலையத்தில் காதலியை ஐ.டி. நிறுவன ஊழியர் கரம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலி

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பஞ்சல் பெருமணலை சேர்ந்தவர் போஸ்கோ. இவருடைய மகள் அந்தோணி சுமிதா (வயது 24). இதேபோல் சேலம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் பார்த்தசாரதி (29). இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இந்த நிலையில் பார்த்தசாரதி மும்பைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு சென்று விட்டார். ஆனாலும் இருவரும் செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே, இந்த காதல் விவகாரம் அந்தோணி சுமிதா பெற்றோருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காதலுக்கு அந்தோணி சுமிதா தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்தோணி சுமிதா தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார். அதன்பின்னர் அவரை மீண்டும் வேலைக்கு அனுப்பவில்லை. உவரி அருகே உள்ள கூடுதாழையில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு வைத்திருந்தனர். இந்த தகவலை காதலன் பார்த்தசாரதிக்கு, அந்தோணி சுமிதா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பார்த்தசாரதி உவரி போலீஸ் நிலையத்துக்கு வந்து நடந்த சம்பவத்தை கூறி, காதலியை மீட்டு தரும்படி கேட்டுக்கொண்டார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் அந்தோணி சுமிதாவையும், அவரது பெற்றோரையும் அழைத்தனர். பார்த்தசாரதியும் வந்திருந்தார். இருதரப்பினரிடமும் போலீசார் பேசினர். அப்போது அந்தோணி சுமிதா தனது காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். அதைத்தொடர்ந்து அந்தோணி சுமிதாவை காதலன் பார்த்தசாரதியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். காதலியை கரம்பிடித்த மகிழ்ச்சியில் பார்த்தசாரதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story