ஐ.டி.ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


ஐ.டி.ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஐ.டி.ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை


மதுரை வண்டியூர் அழகியசிங்கம் நகரை சேர்ந்தவர் முத்து சரவணன் (வயது 28).என்ஜினீயரிங் படித்த இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு ஆண்டாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மானகிரியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். ஆனால் அவருக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story