சீர்காழியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை


சீர்காழியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து வருகிறது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இதனால் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் அரசு உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படாததால் மழை நீரில் நனைந்து வீணாகி வருகிறது. தொடர் மழையால் சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தேர் தெற்கு வீதி, தேர் கீழ வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், குடியிருப்பு வாசிகளும் பாதிக்கப்பட்டனர். சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் உளுந்து, பயிறு, காராமணி, உள்ளிட்ட பயிறு வகைகளை விதைப்பு செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்


Next Story