வாழப்பாடி அருகே கிணற்றில் கைக்குழந்தையுடன் தவறிவிழுந்த பெண் மீட்பு குழந்தை இறந்த பரிதாபம்
வாழப்பாடி அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் மீட்கப்பட்டார். குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி, அக்.14-
வாழப்பாடி அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் மீட்கப்பட்டார். குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்தார்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த திருமனூர் ஊராட்சி அண்ணாபுரம் வடக்கு காடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவருடைய மனைவி தேன்மொழி (28). இந்த தம்பதிக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்தது.
இவர்களது தோட்டத்தில் உள்ள கிணற்று ஓரமாக நேற்று தேன்மொழி கைக்குழந்தையுடன் நடந்து சென்றார். அப்போது தேன்மொழி கைக்குழந்தையுடன் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்த தேன்மொழியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்க முயன்றனர்.
குழந்தை சாவு
இது குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்து ெபாதுமக்கள் உதவியுடன் கிணற்றில் தத்தளித்த தேன்மொழியை மீட்டனர். ஆனால் தண்ணீரில் மூழ்கி அவரது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அந்த கைக்குழந்தையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் கைக்குழந்தையுடன் பெண் தவறிவிழுந்த நிலையில், குழந்தை பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.