"பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்


பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
x

தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பாக கொரோனா இன்னும் மாறவில்லை; தனிநபர் பாதிப்பு தான் அதிகம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டைத் தவிர மற்ற எந்த மாநிலத்திலும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தவில்லை. விமான நிலையங்களில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 11,000 ஆக உயர்த்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டது. விமான நிலையங்களில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா கொத்து கொத்தாக பரவில்லை. தனிநபர் பாதிப்பு தான் அதிகம். ஆக்ஸிஜன், படுக்கைகள், மருந்துகள் 100% தேவை கையிருப்பில் உள்ளன.தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பாக கொரோனா இன்னும் மாறவில்லை, தனிநபர் பாதிப்பு தான் அதிகம். பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம். கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story