ஆன்லைன் ரம்மியால் மூவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது - டிடிவி தினகரன்


ஆன்லைன் ரம்மியால் மூவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது -  டிடிவி தினகரன்
x

இப்போது மேலும் மூன்று பேர் உயிரிழப்பது வரை தாமதம் நேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, இனிமேலும் தாமதிக்காது ஆன்லைன் ரம்மி சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மூவர் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய முக்கியமான சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி ஆளுநர் மாளிகை அரசுக்கு திருப்பி அனுப்புவதும், விளக்கம் கொடுத்த பின்னும் பலமாதங்களாக சட்டங்கள் கிடப்பில் போட்டிருப்பதுமாக நடவடிக்கைகள் உள்ளன.

இப்போது மேலும் மூன்று பேர் உயிரிழப்பது வரை தாமதம் நேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.

எனவே, இனிமேலும் தாமதிக்காது ஆன்லைன் ரம்மி சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.


Next Story